Agatiam Offer Zone Top Deals & Discounts

Welcome to our Site

அகத்தியம் பசுமை அங்காடி

அகத்தியம் (www.agatiam.com) அறக்கட்டளையின்(www.agatiamtrust.com) கீழ் வேளாண்மை பெறுக வேண்டி, ஒரு விவசாயி நேரடியாக தாங்கள் விளைவித்த பொருட்களை தாமே விற்பதற்கான ஒரு மென்பொருள் இல்லையே என்ற கவலையை போக்க ஒரு செயலி, கையடக்க தொலைபேசியின் வாயிலாக அகத்தியம் (www.agatiam.com)- ஒரு இணைவை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணுமாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனிதசாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றைகுறைவாக பயன்படுத்தி அல்லது முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய்மற்றும்களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும். இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி கருத்தில் கொண்டு இந்த வலைத்தளம் ஒரு விவசாயிக்கும் வியாபாரிகளுக்கும் மற்றும் மதித்தக்க வாடிக்கையாளர்களையும் இணைவுக்கு இந்த அகத்தியம் வலைத்தளம் வழிவகை செய்கிறது.

நம் மண்வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு இயற்கை வேளாண்மையை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த இயற்கைவளங்களில் நமது எதிர்காலசந்ததியினருக்கும் பங்கு மற்றும் உரிமை உண்டு. இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து, இயற்கை உரங்களை பயன் படுத்திவேளாண் உற்பத்தியை அதிகப்படுத்துவோம்.

பசுமைஅங்காடிகள்

மக்களிடம் இயற்கை வேளாண்மை பற்றியவிழிப்புணர்வு ஏற்படுத்துவதோடும், இரசாயன உரங்களின் பயன்பாடுபற்றிய எண்ணங்களை மாற்றுவதும், நகரவாசிகளுக்கு இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் பொருட்கள் கிடைக்கச் செய்யவும் பசுமை அங்காடிகளின் முக்கிய நோக்கங்களாகும். தற்பொழுது பசுமை அங்காடிகள் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குவங்காளத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் சிறப்பாக செயலாற்றி, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

பசுமை அங்காடியின் நன்மைகள்

இப்பசுமை அங்காடியில் விவசாயிகள் நேரடியாக தங்களது இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யலாம். இப்பசுமை அங்காடியில் இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கின்றது.

Our Video

அகத்தியம் பசுமை அங்காடி

No.1 Leading E-commerce marketplace with over 70 million Products

© 2018 Agatiam Shoppy. All rights reserved